Sunday, September 20, 2026
More

    Latest Posts

    ‘துரந்தர் 2’ படத்திற்குத் தடை விதிக்கக் கோரிக்கை: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!

    சென்னை,

    பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் ‘துரந்தர்’. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது.

    அதனை தொடர்ந்து, துரந்தர் படத்தின் 2 ஆம் பாகமாக ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம் கடந்த 19ம் தேதி வெளியானது. 3 மணி 49 நிமிடம் கொண்ட இந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றும், வசூல் சாதனை படைத்தும் வருகிறது.

    இந்த நிலையில், துரந்தர் 2 படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஷீலா என்பவர் ஐகோர்ட்டில் இது தொடர்பாக அவசர முறையீட்டாக வைத்தார். அதில், அரசியல் தொடர்பான ஒரு சார்பு கருத்துகள் மற்றும் முரண்பாடான கருத்துகள் இடம் பெற்றுள்ளதால் துரந்தர் 2 படத்தை தமிழ்நாட்டில் வெளியிட தடை விதிக்க வேண்டும். தேர்தல் நடத்தை அமலில் உள்ளதால், இந்த படம் தாக்கத்தை ஏற்படுத்தி விடும்” என்று கூறினார். இந்த முறையீட்டை மனுவாக தாக்கல் செய்ய தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். எனவே, மனுவாக தாக்கல் செய்த பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத்தெரிகிறது.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.