Saturday, September 19, 2026
More

    Latest Posts

    National Film Awards: 69வது தேசிய திரைப்பட விருதுகள் !

    69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2021ம் ஆண்டு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்கள் திரைப்பட விருதுகளுக்கு தகுதி பெற்றன. இதற்கான் அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது.

    தேசிய திரைப்பட விருதுகளுக்கு எப்போதும் பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. 1954 முதல் ஆண்டுதோறும் வெளியாகும் திரைப்படங்களில் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த படம் எவை என நடுவர்களால் தேர்வுசெய்து இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

    போட்டியில் இருக்கும் திரைப்படங்கள்

    இந்த ஆண்டிற்கான 69வது தேசிய திரைப்பட விருதுகளின் போட்டியில் ஜெய்பீம், சர்ப்பட்டா பரம்பரை, கர்ணன், ஆர்,ஆர்,ஆர், கங்குபாய் கத்யாவாடி, தி காஷ்மீர் பைல்ஸ், மின்னல்முரளி, தி கிரேட் இண்டியன் கிச்சன் உள்ளிட்ட பல முக்கியப் படங்கள் போட்டியில் இடம்பெற்றிருந்தன.

    கேதன் மேத்தா (Feature films category), வசந்த் சாய் (non feature films category), நீரஜா சேகர், யதேந்திர மிஸ்ரா, நானு பாசின் ஆகியோர் இதற்கு ஜூரிகளாக இடம்பெற்றிருக்கின்றன.

    இந்நிலையில் இந்த ஆண்டிற்கான 69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் முழுப்பட்டியல் இதோ…

    அல்லு அர்ஜூன், ஆலியா பட்

    அல்லு அர்ஜூன், ஆலியா பட்

     

    விருதுகள்:

    சிறந்த படம்

    ‘ராக்கெட்ரி; தி நம்பி எஃபெக்ட்’ (ஆர். மாதவன்)

    சிறந்த இயக்குநர்: நிகில் மகாஜன் (கோதாவரி)

    சிறந்த நடிகர்

    சிறந்த நடிகை

    ஆலியா பட் (கங்குபாய் கத்யாவாடி) மற்றும் கீர்த்தி சனோன் (மிமி mimi)

    சிறந்த குழந்தைக் கலைஞர்

    பவின் ரபாரி (Last Film Show (சல்லோ ஷோ)

    சிறந்த குழந்தைகள் திரைப்படம்

    காந்தி&கோ (குஜராத்தி)

    சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்

    ஆர்.ஆர்.ஆர் (ராஜமெளலி)

    சிறந்த துணை நடிகர்

    பங்கஜ் திரிபாதி – (‘மிமி Mimi (இந்தி)’)

    சிறந்த துணை நடிகை – பல்லவி ஜோஷி -( தி காஷ்மீர் பைல்ஸ் (இந்தி))

    தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது

    தி காஷ்மீர் பைல்ஸ்

    சிறப்பு ஜூரி விருது

    ‘Shershaah’ (இயக்குநர் விஷ்ணுவர்தன்)

    சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது

    மேப்பாடியான்

    கடைசி விவசாயி

    கடைசி விவசாயி

    Feature Flims

    ஸ்பெஷல் மென்ஷன்

    நல்லாண்டி- கடைசி விவசாயி (தமிழ்)

    இந்திரன்ஸ் – ‘Home’ (மலையாளம்)

    ஆரண்யா குப்தா & பிதன் பிஸ்வாஸ் – Jhilli (Discards)

    ஜஹனாரா பேகம் – Anur – Eyes on the Sunshine

    சிறந்த ரீஜனல் திரைப்படங்கள்:

    சிறந்த தமிழ் திரைப்படம்

    கடைசி விவசாயி (மணிகன்டன்)

    சிறந்த குஜராத்தித் திரைப்படம்

    Last Film Show (சல்லோ ஷோ)

    சிறந்த கன்னட திரைப்படம்

    ‘777 சார்லி’

    சிறந்த மலையாள திரைப்படம்

    ‘Home’ (ரோஜின் பி.தாமஸ்)

    சிறந்த மராத்தி திரைப்படம் –

    ‘Ekda Kay Zala’ (சலீல் ஸ்ரீனிவாஸ் குல்கர்னி)

    சிறந்த இந்தி திரைப்படம்

    ‘சர்தார் உதம்’ (சுஜித் சிர்கார்)

    சிறந்த தெலுங்கு படம்

    Uppena (Wave) இயக்குநர் சனா புச்சிபாபு (Sana Buchibabu)

    சிறந்த பெங்காலி திரைப்படம்

    Kalkokkho – House of Time (இயக்குநர்; ராஜ்தீப் பால் & சர்மிஸ்தா மைதி)

     தேவிஶ்ரீ பிரசாத், கீரவாணி

    தேவிஶ்ரீ பிரசாத், கீரவாணி

    தொழில் நுட்ப ரீதியிலான விருதுகள்

    சிறந்த பாடல் இசைக்கான விருது – தேவிஶ்ரீ பிரசாத் ( ‘புஷ்பா’ )

    சிறந்த பின்னணி இசை – கீரவாணி (ஆர்.ஆர்.ஆர்)

    சிறந்த பின்னணி இசை பாடகி – ஸ்ரேயா கோஷல் (இரவின் நிழல்- மாயவா சாயவா)

    சிறந்த பின்னணி இசை பாடகர் – கால பைரவா (பாடல்: Komuram Bheemudo படம்: ஆர்.ஆர்.ஆர்)

    சிறந்த படத்தொகுப்பு – சஞ்சய் லீலா பன்சாலி (கங்குபாய் கத்யாவாடி)

    சிறந்த பாடல் வரிகள் – பாடலாசிரியர்: சந்திரபோஸ் (பாடல்: தம் தம் தம் படம்: Konda Polam (தெலுங்கு)

    சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு

    டிமிட்ரி மாலிச் & மான்சி துருவ் மேத்தா (சர்தார் உதம்)

    சிறந்த ஒளிப்பதிவு

    அவிக் முகோபாத்யாய் (சர்தார் உதம்)

    சிறந்த ஆடை வடிவமைப்பாளர்

    வீர கபூர் (சர்தார் உதம்)

    சிறந்த ஒப்பனைக் கலைஞர் – ப்ரீதிஷீல் சிங் டிசோசா (கங்குபாய் கத்யாவாடி)

    ஸ்ரேயா கோஷல்

    ஸ்ரேயா கோஷல்

    சிறந்த திரைக்கதை

    ஷாஹி கபீர் (Nayattu ‘The Hunt’ -மலையாளம்),

    சஞ்சய் லீலா பன்சாலி & உட்கர்ஷினி வசிஷ்டா (கங்குபாய் கத்யாவாடி – இந்தி)

    சிறந்த வசன எழுத்தாளர்: உத்கர்ஷினி வசிஷ்டா & பிரகாஷ் கபாடியா (கங்குபாய் கத்யாவாடி – இந்தி).

    சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட் – வி ஸ்ரீனிவாஸ் மோகன் (ஆர்.ஆர்.ஆர்)

    சிறந்த நடன இயக்குநர் – பிரேம் ரக்ஷித் (ஆர்.ஆர்.ஆர்)

    சிறந்த ஸ்டண்ட் கோரியோகிராஃபி – கிங் சாலமன் (ஆர்.ஆர்.ஆர்)

    சிற்பங்களின் சிற்பங்கள்

    சிற்பங்களின் சிற்பங்கள்

    Non – Feature Flims

    சிறந்த கல்வித் திரைப்படம் – ‘சிற்பங்களின் சிற்பங்கள்’ (இயக்குநர் லெனின்)

    சிறந்த இசையமைப்பாளர் – ‘கருவறை’ – குறும்படம் (ஸ்பெஹல் மென்ஷன்)

    அதிகமான விருதுகளை வென்ற திரைப்படங்கள்

    ஆர்.ஆர்.ஆர் – 6 விருதுகள்

    கங்குபாய் கத்யாவாடி – 4 விருதுகள்

    சர்தார் உதம் – 4 விருதுகள்

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.