Saturday, September 19, 2026
More

    Latest Posts

    மிர்சாபூர் வசூல் வேட்டை: இந்தியாவில் ரூ.200 கோடியைக் கடந்து சாதனை!

    குர்மீத் சிங் இயக்கத்தில் வெளியான ’மிர்சாபூர்: தி மூவி’ திரைப்படம் இந்தியாவில் மட்டுமே ரூ.200 கோடி வசூலித்துள்ளது.

    புனீத் கிருஷ்ணா, கரண் அன்ஷ்மன் உருவாக்கத்தில் மிர்சாபூர் என்ற இணையத்தொடர் 2018ல் நெட்பிளிக்ஸில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இதன் அடுத்தடுத்த பாகங்கள் 2020, 2024ல் வெளியாகின.

    இந்த இணையத் தொடருக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இதனை திரைப்படமாக எடுக்க படக்குழு முடிவெடுத்தது. கிட்டதட்ட அதே குழுவினர் இதில் நடித்துள்ளார்கள்.

    புனீத் கிருஷ்ணா எழுதிய இந்த ’மிர்சாபூர்: தி மூவி’ படத்தினை குர்மீத் சிங் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை எக்செல் என்டர்டெயின்மென்ட் மற்றும் அமேசன் எம்ஜிஎம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

    இந்தப் படத்தில் பங்கஜ் த்ரிபாதி, அலி ஃபசல், திவ்யேந்து, ஜிதேந்திர குமார் (விக்ராந்த் மாஸிக்குப் பதிலாக), ஸ்வேதா த்ரிபாதி என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

    இந்தப் படம் கடந்த செப்.4ஆம் தேதி வெளியானது. 197 நிமிஷங்கள் (3 மணி நேரம் 17 நிமிஷங்கள்) கொண்டதாக வெளியாகிய இந்தப் படத்துக்கும் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.

    இந்தப் படம் இந்தியாவில் மட்டுமே ரூ.204.87 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அரசாங்கத்தின் வரிகள் போக படம் ரூ.171.86 கோடி வசூலிட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இந்தாண்டின் வெளியான ஹிந்தி திரைப்படங்களில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. துர்ந்தர் படம் ரூ.1,852 கோடி வசூலித்ததும் குறிப்பிடத்தக்கது.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.