Saturday, September 19, 2026
More

    Latest Posts

    நயன்தாராவுடன் நடிப்பேன் என கனவிலும் நினைத்ததில்லை – கவின்

    நடிகர் கவின் தான் நடிகை நயன்தாராவுடன் நடிப்பேன் என கனவிலும் நினைத்ததில்லை என்று பேசிய விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தினை, ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    தொலைக்காட்சி தொடர்களில் இருந்து வெள்ளித் திரைக்கு வந்திருக்கும் நடிகர் கவின் நயன்தாரா உடன் முதல்முறையாக நடித்திருக்கிறார்.

    இந்தப் படத்தில், முக்கிய கதாபாத்திரங்களில் மறைந்த நடிகர் பாக்யராஜ், நடிகர்கள் பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ் போன்றவர்கள் நடித்துள்ளனர்.

    நேற்று டிரைலர் வெளியான நிலையில், இந்தப் படம் வரும் ஆக. 28 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கவின் பேசியிருப்பதாவது:

    பொதுவாகவே நான் கமெண்ட்ஸ்களை படிப்பதில்லை. ஆனால், இந்தப் படத்தின் அறிவிப்பின்போது ஒருவர் ’சீரியலில் நடித்திருந்த கவின் நயன்தாரா நடிப்பான் என ஒருநாளும் நினைத்திருக்க மாட்டான்’ எனக் கமெண்ட் செய்திருந்தார்.

    இதே தியேட்டரில் யாரடி நீ மோகினி படத்தினை நானும் எனது நண்பர்கள் 23 பேரும் பார்த்தோம். நிச்சயமாக அந்தக் கவின் நயன்தாரா உடன் நடிப்பாரென நினைத்திருக்கமாட்டான். நயன் தாரா உடன் நடிப்பது என்பது எனது பக்கெட் லிஸ்ட்டில் கூட இல்லை. பக்கெட்டுக்கு வெளியே இருக்கிறது. நாமும் நன்றாகத்தான் உழைத்திருக்கிறோம் போல் என நினைத்துக்கொண்டேன் என்றார். இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.