Saturday, September 19, 2026
More

    Latest Posts

    ‘ஜுராசிக் பார்க்’ படத்தின் நாயகன் சாம் நீல் காலமானார்: திரையுலகம் அதிர்ச்சி!

    ‘ஜுராசிக் பார்க்’ (Jurassic Park) திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான நடிகர் சாம் நீல் (Sam Neill) காலமானார். அவருக்கு வயது 78.

    நியூசிலாந்தைச் சேர்ந்த சாம் நீல், உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்திரேலியாவின் சிட்னியில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு சர்வதேச திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    1980 மற்றும் 1990-களில் ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த சாம் நீல், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘ஜுராசிக் பார்க்’ திரைப்படத்தில் டாக்டர் அலன் கிராண்ட் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார். பின்னர் வெளியான ஜுராசிக் பார்க் III மற்றும் ஜுராசிக் வேர்ல்ட் டோமினிய படங்களிலும் அதே கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், ஆஸ்கர் விருதுகளை வென்ற ‘தி பியானோ’ (The Piano) உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்களிலும் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

    சாம் நீலின் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள் மற்றும் சக கலைஞர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.