Saturday, September 19, 2026
More

    Latest Posts

    வைரலாகும் “ஐயோசாமி நீ எனக்கு வேணாம்” பொத்துவில் அஸ்மின் பாடல்

    “ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதூம் ”

    கணவனால், காதலனால் ஏமாற்றப்பட்ட பெண்களின் சர்வதேச கீதமாக ஒரு பாடல் இன்று வெளிவந்து வைரலாகி வருகிறது.

    விஜய் ஆண்டனியின் “நான்” திரைப்படத்தில் ‘தப்பெல்லாம் தப்பே இல்லை’ பாடலை எழுதிய தமிழ் சினிமாவில் அறிமுகமான இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின்தான் இப்பாடலை எழுதியுள்ளார்.

    இவர் ஏற்கனவே விஸ்வாசம்,அண்ணாத்த படங்களுக்கு எழுதிய புரோமோ பாடல்கள் வைரலாகின.ஜெயலலிதாவின் இரங்கல் பாடலையும் இவரே எழுதியுள்ளார்.

    இலங்கையின் தேசிய விருதுபெற்ற இசையமைப்பாளர் சனுக விக்ரமசிங்கே இசையமைத்துள்ளார். பிரபல இலங்கை பாடகி வின்டி குணதிலகே பாடலைப் பாடியுள்ளார். மொழி தெரியாமலே உலக இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மனிகே மகே ஹித்தே பாடல் போல் இலங்கையில் இருந்து வெளிவந்துள்ள இப்பாடலும் அனைத்து இசை ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    மொழி தெரியாமலே உலக இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மனிகே மகே ஹித்தே பாடல் போல் இலங்கையில் இருந்து வெளிவந்துள்ள இப்பாடலும் அனைத்து இசை ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    Ayyo Saami
    ஐயோ சாமி

    Artiste – Windy Goonatillake
    Lyrics – Pottuvil Asmin
    Melody & Music – Sanuka Wickramasinghe
    All Keys & Guitalele – Sanuka Wickramasinghe
    Mixing & Mastering – Sanuka Wickramasinghe

    Visualization – Vihayas Productions
    Creative Director – Prasad Aluthwattha
    Visual & Motion Design – Prasad Aluthwattha
    Production Manager – U Rasta G Bandaragoda
    Videography / Still Photography – U Rasta G Bandaragoda
    Production Assistant – Pasan Rathnayakeu.

    ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் …

    பல்லவி

    ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்
    பொய் பொய்யா சொல்லி
    ஏமாத்தினது போதும்..

    அனுபல்லவி

    மனச்சாட்சியை
    நீ விலைபேசினாய்
    அட நீசொல்லு நீ மனுசனா?

    ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்
    பொய் பொய்யா சொல்லி
    ஏமாத்தினது போதும்..

    சரணம்-01

    உனைப்போன்ற ஆணை
    நான் நம்பி வந்தேன்
    உயிர்கொன்று நீ ஓடினாயே..

    எனைப்போன்ற பெண்ணை ஏமாற்றிவிட்டு
    தினம் நூறு பொய்கூறுறாயேன்…?

    ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்
    பொய் பொய்யா சொல்லி
    ஏமாத்தினது போதும்..

    மனச்சாட்சியை
    நீ விலைபேசினாய்
    அட நீசொல்லு நீ மனுசனா?

    ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்
    பொய் பொய்யா சொல்லி
    ஏமாத்தினது போதும்..

    சரணம்-02

    தேன்போலே பேசி
    துரோகங்கள் செய்தாய்
    அதை யாருக்கும் நீ செய்யாதே.

    நான் போன பின்னர்
    எனைப்பற்றி இழிவாய்
    யாரோடும் பேசிக்கொல்லாதே.

    ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்
    பொய் பொய்யா சொல்லி
    ஏமாத்தினது போதும்..

    மனச்சாட்சியை
    நீ விலைபேசினாய்
    அட நீசொல்லு நீ மனுசனா?

    ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்
    பொய் பொய்யா சொல்லி
    ஏமாத்தினது போதும்..

    பாடலாசிரியர் அஸ்மின்

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.