Saturday, September 19, 2026
More

    Latest Posts

    சிங்கள மெட்டு, ரோமியோ பட வெத்தல பாடல் ஆன கதை (பாடல் வீடியோக்கள்)

    ஆரம்ப காலத்தில், பல சிங்கள திரைப்படப் பாடல்கள் இந்திய மெட்டுகளை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டன. மிகக் குறைவான சுயாதீன பாடல்களே தயாரிக்கப்பட்டன.

    இவ்வாறான நிலையில் இருந்த சிங்கள இசை , சர்வதேச மட்டத்திற்கு உயர்ந்த சந்தர்ப்பங்கள் பல உண்டு.

    அதன்படி இலங்கையில் உருவாக்கப்பட்ட பாடல்கள் இந்திய திரைப்படப் பாடல்களுக்குப் பயன்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

    இலங்கையின் இளம் பாடகரும் இசையமைப்பாளருமான ரவி ரோய்ஸ்டரின் ஒரு பாடலை தென்னிந்திய பிளாக்பஸ்டருக்குப் பயன்படுத்தியதே மிகச் சமீபத்திய சாதனையாகும்.

    விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ‘ரோமியோ’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பாவிக்கப்பட்டுள்ளது.

    பிரபல நடிகர்களான விஜய் ஆண்டனி, மிர்னாலினி ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

    இப்படத்தின் முக்கிய பாடலான ‘வெத்தல ‘ மார்ச் 13 அன்று யூடியூப்பில் வெளியிடப்பட்டு 4 நாட்களில் 2.2 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் இசைக்கான யூடியூப்பின் டிரெண்டிங்கிலும் இது 11வது இடத்தைப் பிடித்தது.

    தென்னிந்திய பிளாக்பஸ்டரின் முக்கிய பாடலுக்கு இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இருக்கும் வாய்ப்பு குறித்து ரவி ராய்ஸ்டரிடம் கேட்ட போது,

    “என்னுடைய சிங்களப் பாடலைப் பார்த்து விஜய் ஆண்டனி சாரின் உதவி இயக்குநர்தான் எனக்கு போன் செய்தார். என் நம்பரைக் கண்டுபிடித்து வாட்ஸ்அப்பில் மெசேஜ் போட்டார். விஜய் சாரின் அடுத்த படத்துக்கு என் பாடலின் டியூனை எடுக்க விரும்புவதாகச் சொன்னார். நாங்கள் விவாதித்தோம், நான் இந்தியா சென்று பாடல் வேலைகளை முடித்தேன்” என்றார்.

    இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்பதை முதலில் அறிந்தபோது ஏற்பட்ட உணர்வை விவரித்த ரவி ராய்ஸ்டர்,

    “உண்மையில், இதுபோன்ற ஒன்றை நான் எதிர்பார்க்கவில்லை. இதுபோன்ற பணிகளில் பங்களிக்க வேண்டும் என நான் கனவு கண்டேன், ஆனால் இவ்வளவு சீக்கிரம் எனக்கு இது போன்ற ஒன்றை நான் பெறுவேன் என்று நான் நினைக்கவில்லை. அப்போது என்ன நடந்தது என்பதை வார்த்தைகளால் விவரிக்க கடினமாக உள்ளது.”

    தமிழ் மற்றும் தெலுங்கில் பாடல் எப்படி பாடப்பட்டது

    ரோமியோ படத்தில் இடம் பெற்ற ‘வெத்தல’ பாடலை தமிழ், தெலுங்கில் பாட, ரவி ராய்ஸ்டருக்கு எப்படிக் கிடைத்தது என விபரித்தார்.

    தனக்கு இரண்டு மொழிகளும் தெரியாது என்றும், பாடலைப் பாடுவது தனக்கு சவாலாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

    “தமிழ், தெலுங்கு மொழிகளில் பாடலைப் பாடுவது எனக்குப் பெரிய சவாலாக இருந்தது. சிங்களத்தில் வார்த்தைகளின் உச்சரிப்பை எழுதி வைத்துவிட்டுப் பாடலைப் பாடினேன். எப்படியும் ஒரு அமெச்சூர் போல் உணராமல் பாட முடிந்தது .”

    ரவி ரொய்ஸ்டர் மாத்தறையில் பிறந்து மாத்தறை ராகுல் வித்தியாலயத்தில் படித்தவர்.

    “பள்ளிப் பருவத்திலிருந்தே இசையில் நாட்டம் கொண்டிருந்தேன். பிறகு உயர்கல்விக்காக இந்தியாவில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக் கழகத்திற்குச் சென்றேன். அங்கு நாடகம் மற்றும் நாடகக் கலைகளை கற்றேன். பாரம்பரியப் பாடல் பாடுவதை துணைப் பாடமாகப் படித்தேன். என் குடும்பத்தில் எவருக்கும் இசையில் ஈடுபாடு இல்லை. ஆனால் சிறுவயதில் இருந்தே எனக்கு இசையில் ஆர்வம் அதிகம், அதனால் சிறுவயதில் இருந்தே இசையமைப்பாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

    ஆரம்ப கட்டத்தில் யூடியூப்பில் பல பாடல்களை வெளியிட்டிருந்தார். பின்னர், தெரண தொலைக்காட்சியின் ட்ரீம்ஸ்டர் 8 நிகழ்ச்சியில் 5வது இடத்தைப் பெற்று, நாட்டின் இசைத்துறையில் ஓரளவு பிரபலமடைந்தார்.

    சமீபத்தில் அவர் பாடிய ‘ஹமார பனவர’ பாடல் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

    இந்திய பாடல்களை அடிப்படையாக கொண்டு பாடல்களை உருவாக்கிய காலம் மாறி, இந்திய இசையமைப்பிற்கு இலங்கையின் ட்யூன்களை பயன்படுத்துவது “நல்ல போக்கு” என்பது ரவி ராய்ஸ்டர் கருத்து.

    “இந்தப் பாடல் என்னுடைய சொந்த படைப்பு. இந்தப் பாடல் எந்த இசையையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். முன்பு இந்தியப் பாடல்களை எடுத்தோம். இப்போது எங்கள் பாடல்களை அவர்கள் எடுக்கிறார்கள். இது நல்ல டிரெண்ட்.”

    ரோமியோவுக்குப் பிறகு மேலும் இரண்டு தென்னிந்தியப் படங்களுக்கு பாடல்கள் அமைக்க அழைப்பு வந்துள்ளது என்றார்.

    எதிர்காலத்தில் மேலும் வெற்றிகரமான பாடல்களை உருவாக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    சிங்கள பாடல்

    வெத்தல பாடல்

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.