Saturday, September 19, 2026
More

    Latest Posts

    கலை வாழ்க்கைக்கு குட்பை : ஆன்மீக வாழ்வை நாடி இலங்கையை விட்டு வெளியேறிய பூஜா

    இலங்கை ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட பிரபல நடிகை பூஜா உமாசங்கர் கலை வாழ்க்கையிலிருந்து எந்தவொரு அறிவிப்பையும் செய்யாமல் கலைக்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டு , இலங்கையை விட்டு வெளியேறியமை பலருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

    பூஜாவின் , இரண்டு திருமணங்கள் தோல்வியுற்றதால், அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏமாற்றமடைந்து , ஆன்மீக வாழ்வை நாடி , நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்தியாவின் பெங்களூரில் படித்து இளங்கலை வணிகவியல் பட்டம் மற்றும் முதுகலை எம்பிஏ பட்டம் பெற்ற பூஜா, கன்னடம், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சரளமாக பேசக்கூடியவராக இருந்தார்.

    “நான் இந்திய நடிகை அல்ல. நான் இலங்கைப் பெண், என் தாய் சிங்கள பௌத்தர், நான் கொழும்பில் பிறந்தேன். நான் இலங்கையை சேர்ந்த ஒரு இளைஞரை திருமணம் செய்து கொண்டேன். நானும் இலங்கையில் இருக்கிறேன். சிங்களம் மற்றும் தமிழ் நன்றாக பேசுவேன். எனது தந்தை இந்தியர் என்பதால் நான் இந்தியாவில் படித்தேன். அவ்வளவு தான். நான் இப்போது இலங்கையின் சிறந்த பெண் என்று தெரிவித்திருந்த பூஜா, இந்து மதத்தை பின் பற்றி வாழ்ந்தார். .

    என் படங்களுக்கு ஆரம்பத்தில் மற்றவர்களையே டப்பிங் பேச வைத்தேன். ஆனால் சரிகம படத்தில் நான் எனது சொந்தக் குரலில் பேசியுள்ளேன். நான் முன்பு இருந்த சிங்கள உச்சரிப்பு பிரச்சனை இப்போது சரி செய்யப்பட்டுள்ளது,” என்று 2017 இல் தனது இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு நம்பிக்கையுடன் வெளிப்படுத்தினார்.

    கண்ணகி கதையான பத்தினி (சிங்களம்)

    “எவ்வளவு பெரிதாக விழா எடுத்து கல்யாண வீடு நடத்தினாலும் , கடைசியில் நானும் என் கணவரும் மட்டும்தான் சேர்ந்துதான் வாழப் போகிறோம். நான் தேவையில்லாமல் பணத்தை வீணாக்க விரும்பவில்லை. “அதிக பணம் இருந்தால், அந்த பணத்தை நான் தொண்டு நிறுவனத்திற்கு கொடுக்க விரும்புகிறேன்,” என்று அவர் தெரிவித்திருந்தார். அதுபோலவே தானாக சில உதவிகளை செய்து வந்தார்.

    இருப்பினும், சில காலத்திற்குப் பிறகு, அவரது மாற்றப்பட்ட பேஸ்புக் பதிவுகள் , அவர் பின்பற்றிய இந்து மதத்திற்கு பதிலாக, அவர் கிறிஸ்தவத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவராக மாறியுள்ளது தெரிந்தது, மேலும் அவர் தொடர்ந்து கிறிஸ்தவம் தொடர்பான செய்திகளை பரிமாறிக்கொண்டார்.

    பூஜா உமாசங்கர் கடந்த காலங்களில் பல பொது நிகழ்வுகளை தவறவிட்டதால் கலை வாழ்க்கையை விட்டுவிட்டு ஆன்மீக வாழ்க்கையில் நுழைய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. ஏமாற்றத்தால் மனமுடைந்த பூஜா, இலங்கையிடம் இருந்து விடைபெற்று சமீபத்தில் இந்தியா திரும்பியதாக தெரியவருகிறது.


    இந்த நாட்களில் திரையிடப்படும் ‘சிஹிநயகி ஆதரே’ (காதல் ஒரு கனவு) என்ற சிங்கள திரைப்படத்தின் முன்னணி நடிகையாக இருந்தார், மேலும் இது அவரது திரைப்பட வாழ்க்கையில் அவரது கடைசி திரைப்பட நடிப்பாக கருதப்படுகிறது. இந்த படத்தின் முன்னோட்டத்திலும் பூஜா கலந்து கொள்ளவில்லை. இலங்கை திரும்புவதில்லை என்ற உறுதியான முடிவை பூஜா எடுத்துள்ளதாகவும், தனது நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இலங்கையில் பிறந்த பூஜா கௌதம உமாசங்கர் சிங்களம், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாவார்.

    அஞ்சலிகா எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அவர் வெகுவாக பேசப்பட்டார். அதனூடாக கிடைத்த வரவேற்பின் காரணமாக, தொடர்ந்து சிங்களப் படங்களில் நடிக்கவும், பின்னர் ஆசை மங் பியாம்பன்ன, சுவந்த தெனுனா ஜீவிதே , பத்தினி, குசபபா, யஹலுவோ, சரிகம போன்ற படங்களில் நடிக்கவும் முடிவு செய்ததோடு , பல விருதுகளையும் பெற்றார்.

    மேலதிக செய்திகள்

    ஷகீலாவை தாக்கிய வளர்ப்பு மகள் ; போலீஸில் பரஸ்புரம் புகார்

    இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலம்: விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி ரன்பீர் கபூர் முதலிடம்

    வரலாற்றில் முக்கியமான நாள்: நடிகர் ரஜினிகாந்த்

    ரூ.75 கோடி வசூலைக் நெருங்கும் கேப்டன் மில்லர்!

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.