Saturday, September 19, 2026
More

    Latest Posts

    முத்தழகு – கலாவதி பங்கு கொள்ளும் “சந்துரு சுயாமய” இசை நிகழ்ச்சி : 9ஆம் திகதி ரூபவாஹினியில் ….

    இலங்கை ரூபவாஹினி சேவையில் எதிர்வரும் 2023.12.09 ஆம் திகதி இரவு 9.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஒளிபரப்பாகும் “சந்துரு சுயாமய” எனும் நிகழ்ச்சியில், இலங்கையின் புகழ்பெற்ற தமிழ், சிங்கள பின்னணிப் பாடகர் கலாபூஷணம் முத்தழகு சூரியகுமார் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

    இந்நிகழ்ச்சியில் தனது 66 ஆண்டு கால இசைத்துறை வரலாற்றை ஞாபகப்படுத்துவதாக அமைந்துள்ளதென பின்னணிப் பாடகர் கலாபூஷணம் சூரியகுமார் முத்தழகு தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் இவருடன் இலங்கையின் புகழ்பெற்ற தமிழ், சிங்கள பின்னணிப் பாடகி கலாபூஷணம் திருமதி எஸ் கலாவதியும் இணைந்து பாடி சிறப்பிக்கிறார்.

    பிரபல வானொலி, தொலைக்காட்சிப் புகழ் சிதத் சோமசுந்தர இசையில் , அறிவிப்பாளர் பபகெர ரோகண தொகுத்து வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியை ரங்க பிரேமரத்ன ரூபவாஹினிக்காக தயாரித்து வழங்குகிறார்.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.