Saturday, September 19, 2026
More

    Latest Posts

    “ஆரம்பத்தில் விலக நினைத்தேன்!” — ‘ஆன் ஆர்டினரி மேன்’ இசை குறித்து கெனிஷா ஓபன் டாக்!

    சென்னை,

    “சரியான நேரத்தில் இந்த படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. ஒரு முழுநீளத் திரைப்படத்திற்கு இசையமைப்பது என்பது மிகப்பெரிய பொறுப்பு. நான் கவனமாக இருந்து பல இசை வகைகளை ஆராய்ந்து உருவாக்கியுள்ளேன்” என்று கெனிஷா கூறியுள்ளார்.

    ரவிமோகன் இயக்கும் ‘ஆன் ஆர்டினரி மேன்’
    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’-ன் பேனரில் ‘ஆன் ஆர்டினரி மேன்’ என்ற படத்தை இயக்கி தயாரித்து வருகிறார்.

    இந்த படத்தில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்து வருவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்திற்கு பிரபல பாடகியான கெனிஷா பிரான்சிஸ் இசையமைக்க உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேற்கத்திய இசை பாணியில் தன் பாடல்களைப் பாடிய கவனம் பெற்றவரான கெனிஷா முதல்முறையாக இசையமைக்க உள்ளதால் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

    முதல் பாடல்
    இதற்கிடையில், இப்படத்தின் முதல் பாடலான, ஹையர் என்ற பாடல் வருகிற செப். 10 ஆம் தேதி வெளியாகும் என புரோமோ மூலம் படக்குழு அறவித்துள்ளது. ரவி மோகன் மற்றும் யங் ராஜா எழுதிய இப்பாடலுக்கு கெனிஷா இசையமைக்கிறார். இந்த பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

    மிகப்பெரிய பொறுப்பு
    இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பாடகி கெனிஷா, ரவி மோகனின் “ஆன் ஆர்டினரி மேன்” படம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “தொடக்கத்தில் இந்தத் திட்டத்தில் இணைய விரும்பவில்லை. ரவி மோகனின் திரைக்கதை மிகவும் சிறப்பாக இருந்ததால், அவருக்கு ஒரு சிறந்த இசையமைப்பாளர் கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் சரியான நேரத்தில் இந்த படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. ஒரு முழுநீளத் திரைப்படத்திற்கு இசையமைப்பது என்பது மிகப்பெரிய பொறுப்பு. கதையை மிஞ்சும் வகையில் இசை அமைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து பல இசை வகைகளை ஆராய்ந்து உருவாக்கியுள்ளேன்” என்று பேசியுள்ளார்.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.