Saturday, September 19, 2026
More

    Latest Posts

    “கல்யாணம் பண்ணிக்கலனாலும் சந்தோஷமா வாழலாம்!” – மனம் திறந்த நடிகை திவ்யா ஸ்பந்தனா!

    சென்னை,

    திருமணம் செய்துகொள்ளாமலும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்றும், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதே மிகவும் முக்கியம் என்றும் நடிகை திவ்யா ஸ்பந்தனா கூறியுள்ளார்.

    ‘சான்டல்வுட் குயின்’ – நடிகை திவ்யா
    தமிழில் வெங்கடேஷ் இயக்கத்தில் குத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் திவ்யா ஸ்பந்தனா (ரம்யா). அதனை தொடர்ந்து பொல்லாதவன், வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. ‘சான்டல்வுட் குயின்’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ரம்யா, திரைத்துறையில் இருந்து ஒதுங்கினார். பின்னர் காங்கிரஸ் சார்பில் 2013-ஆம் ஆண்டு மண்டியா தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். பின்னர் அரசியலில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கி உள்ளார்.

    திருமணம் குறித்த கருத்து
    இவர் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் எதிர்காலம் குறித்து அவ்வப்போது வெளிப்படையாக கருத்துகளை பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில், திருமணம் குறித்து பேசிய அவர், திருமணம் மட்டுமே ஒருவரின் அடையாளத்தை தீர்மானிப்பதில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், திருமணம் செய்துகொள்ளாமலும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்றும், வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதே மிகவும் முக்கியம் என்றும் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:- “திருமணம் மட்டுமே என்னுடைய அடையாளத்தை தீர்மானித்துவிடாது. திருமணம் செய்துகொள்ளாமலும் மகிழ்ச்சியாக வாழ முடியும். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதுதான் மிக முக்கியம்.

    நல்ல நட்பு, ஒரே மாதிரியான சிந்தனை மற்றும் ஆழமான புரிதல் இருந்தால் திருமணம் ஒரு நல்ல முடிவாக இருக்கும். ஆனால், எனக்கு பொருத்தமான நபரை நான் இன்னும் சந்திக்கவில்லை” என்றார். திவ்யா ஸ்பந்தனாவின் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.