Saturday, September 19, 2026
More

    Latest Posts

    ‘சேயோன்’ படத்தில் சீமானின் மிரட்டலான லுக்: ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்ட புதிய வீடியோ!

    சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ படத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இந்தத் தகவலை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் அதன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ‘சேயோனில் இணைகிறார் செந்தமிழன் சீமான்’ என்று தெரிவித்து சிறு வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளது.

    மதுரை பின்​னணி​யைக் கொண்ட கிராமத்​துக் கதை​யான இதன் 2-வது கட்​டப் படப்​பிடிப்பு மதுரையில் சமீபத்தில் தொடங்கியது. இதற்​காகப் பிரம்​மாண்ட செட் அமைக்​கப்​பட்​டுப் படப்​பிடிப்பு நடை​பெற்று வரு​கிறது.

    ‘தாய் கிழவி’ இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் நடித்து வரும் படம், ‘சேயோன்’. ராஜ்கமல் பிலிம்ஸ், டர்மரிக் மீடியா சார்பில் கமல்ஹாசன், மகேந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர்.

    இந்தப் படத்தில் பாக்ய ஸ்ரீ போஸ், பால சரவணன், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.