Saturday, September 19, 2026
More

    Latest Posts

    நடிகர் ரவி மோகனின் ‘அன் ஆர்டினரி மேன்’: இசையமைப்பாளராக அறிமுகமாகும் கெனிஷா!

    நடிகர் ரவி மோகன் முதன்முறையாக இயக்கும் ‘அன் ஆர்டினரி மேன்’ படத்தில் பாடகி கெனிஷா இசையமைப்பாளராக அறிமுகமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது.

    ரவி மோகன் ஸ்டூடியோஸ் அதன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்தப் பதிவில், ‘ஒரு புதிய இசை வனத்துக்குள் நுழைந்துள்ளது. புதிய அத்தியாயம், அதே ஆன்மா. உங்களுக்கு அறிமுகமான கலைஞர், இதுவரை கேட்டு இருக்காத புதிய பாணியில் ‘அன் ஆர்டினரி மேன்’ படத்தில் ஒரு புதிய இசை. அற்புதமான அறிமுகம். கெனிஷாவை சினிமா உலகம் வரவேற்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

    ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி உள்ள நடிகர் ரவி மோகன் தயாரிக்கும் மூன்று படங்களில் ஒன்று ‘அன் ஆர்டினரி மேன்’. இயக்குநராக அவர் அறிமுகமாகும் இந்தப் படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் இசையமைப்பாளராக கெனிஷா அறிமுகமாக இருக்கிறார்.

    ரவி மோகனைப் பிரிந்து விட்டதாக கெனிஷா தெரிவித்து சில மாதங்களே ஆன நிலையில், இந்த அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.