Saturday, September 19, 2026
More

    Latest Posts

    பெற்ற அம்மா பேச்சை கேட்காத நடிகர் பொன்னம்பலம்.

    கோலிவுட் திரையுலகில் ஃபைட் மாஸ்டராக திரைப்படங்களில் அறிமுகமானவர் பொன்னம்பலம். இதன் பிறகு பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.

    பல திரைப்படங்களில் வில்லனாக நடித்திருக்கும் பொன்னம்பலத்தின் நடிப்பிற்கு என்று தனி ரசிகர் கூட்டம் உண்டு.

    முதன் முதலில் கமலஹாசன் நடிப்பில் வெளியான ‘சத்யா’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றினார்.

    இதன் பின்பு ராஜா கைய வச்சா, மைக்கேல் மதன காமராஜன் போன்ற பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    1994 ஆம் ஆண்டு வெளியான ‘நாட்டாமை’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார் பொன்னம்பலம்.

    இப்படத்திற்கு பின்பு இவரின் சினிமா வாழ்க்கை கொடி கட்டி பறந்தது. சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொன்னம்பலம் தனது சினிமா வாழ்க்கையும், குடும்பத்தையும் பற்றி பேசியிருக்கிறார்.

    அவர் பேசுகையில், “நான் என்னதான் சினிமாவில் கொடி கட்டி பறந்தாலும் என் அம்மா என்னை ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க போக வேண்டாம் என்று கூறினார்.

    என் அப்பா, என் தாத்தா எல்லாரும் சினிமாவில் தான் பணத்தை இழந்தனர். ஆனால் நான் சினிமாவில் நல்ல நிலையில் இருக்கிறேன்” என்று பெருமையுடன் பேட்டி அளித்தார்.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.