Saturday, September 19, 2026
More

    Latest Posts

    சீதா ராமன் சீரியலிலிருந்து விலகிய ப்ரியங்கா நல்காரி

    ரோஜா தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ப்ரியங்கா நல்காரி. இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. ரோஜா தொடர் நிறைவடைந்த பின் ஜீ தமிழின் ‘சீதா ராமன்’ தொடரில் ஹீரோயினாக நடித்து வந்தார்.

    இதற்கிடையில், ராகுல் என்பவரை காதலித்து வந்த ரியங்கா, கடந்த மாதம் மலேசியாவுக்கு சென்று திடீரென திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு சீரியல் ஷூட்டிங்கிற்கு கூட மலேசியாவில் இருந்து தான் வந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், அவர் சீரியலிலிருந்து விலகியுள்ளார்.

    இதுகுறித்து ப்ரியங்கா கூறிய போது, ‘சீதா ராமன் தொடர் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும், கணவர் சொல்கிற போது அதை தட்ட முடியவில்லை. அதனால் சீரியலை விட்டு விலகுகிறேன்’ என்று கூறியிருக்கிறார்.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.