Monday, November 16, 2026
More

    Latest Posts

    புதிய சாதனை படைத்த ‘விசில் போடு’

    வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா மற்றும் பலர் நடிக்கும் ‘தி கோட்’ படத்தின் முதல் சிங்கிளான ‘விசில் போடு’ பாடல் ஏப்ரல் 14ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது.

    24 மணி நேரத்தில் இப்பாடல் புதிய சாதனையை யு டியூபில் படைத்துள்ளது. இதுவரை வெளிவந்த பாடல்களில் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படப் பாடலான ‘அரபிக்குத்து’ பாடல் 24 மணி நேரத்தில் 23.7 மில்லியன் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. ‘விசில் போடு’ பாடல் 24.8 மில்லியன் பார்வைகளைப் பெற்று அந்த சாதனையை முறியடித்துள்ளது.

    இருப்பினும் பாடலுக்கான லைக்குகளில் ‘விசில் போடு’ பின்தங்கிவிட்டது. ‘அரபிக்குத்து’ பாடலுக்கு 24 மணி நேரத்தில் 2.20 மில்லியன் லைக்குகள் கிடைத்தது. ஆனால், ‘விசில் போடு’ பாடலுக்கு 1.25 மில்லியன் லைக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.

    இருவிதமான விமர்சனங்களைப் பெற்று இந்த பாடல் தற்போது 30 மில்லியன் பார்வைகளைக் கடந்து டிரெண்டிங்கில் முதலிடத்திலும் உள்ளது.

    More News👇

    ‘விசில் போடு’ : யுவன் – அனிருத் ரசிகர்கள் மோதல்

    ஷங்கர் இல்லத் திருமண விழாவில் சங்கீதா விஜய்

    நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு -இருவர் கைது

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.