Tuesday, November 17, 2026
More

    Latest Posts

    கார் கவிழ்ந்து விபத்து : யாஷிகா ஆனந்த் படுகாயம்

    மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்தார். அவரின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இன்னும் பிரபலமானார். தமிழில் தற்போது சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் நிறைய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

    நேற்று இரவு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் யாஷிகா தனது தோழிகளுடன் காரில் சென்றுள்ளார். மகாபலிபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் யாஷிகாவும் அவருடைய தோழிகள் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். அருகே இருந்தவர்கள் அவர்களை மீட்டு உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    இந்த விபத்தில் யாஷிகாவின் தோழியான பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள யாஷிகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.