Monday, November 16, 2026
More

    Latest Posts

    சித்தார்த்தின் மிகச்சிறந்த படம் இதுதான் : சித்தாவுக்கு நயன்தாரா பாராட்டு

    நடிகர் சித்தார்த் நடிப்பில் அருண்குமார் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் சித்தா என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் கதைக்கருவும் அதை வித்தியாசமாக படமாக்கிய விதமும் ரசிகர்களிடம் மட்டுமல்ல விமர்சகர்களிடமும் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றது.

    குறிப்பாக நீண்ட நாட்களாக ஒரு நல்ல வெற்றிக்காக காத்திருந்த நடிகர் சித்தார்த்திற்கு இந்த படம் ஒரு கம் பேக் படமாக அமைந்து விட்டது. இந்த நிலையில் இந்த படம் குறித்தும் சித்தார்த்தின் நடிப்பு குறிக்கும் மனம் திறந்து பாராட்டியுள்ளார் நடிகை நயன்தாரா.

    இதுகுறித்து நயன்தாரா கூறும்போது, “2023ல் வெளியான சிறந்த திரைப்படங்களில் சித்தாவும் ஒன்று. சித்தார்த், இது உங்களுடைய படங்களிலேயே மிகச் சிறந்த படம். இயக்குனர் அருண்குமார் என்ன மாதிரியான ஒரு அற்புதமான கலையை நீங்கள் உருவாக்கி இருக்கிறீர்கள். அருண்குமாருக்கும் சித்தார்த்திற்கும் இதை சாத்தியமாக்கிய படத்தின் மொத்த குழுவுக்கும் என்னுடைய மிகப்பெரிய பாராட்டுக்கள்” என்று கூறியுள்ளார்

    நயன்தாராவை பொருத்தவரை அவ்வளவு சுலபத்தில் வேறு ஒரு படம் குறித்து மனம் திறந்து பாராட்டை விட மாட்டார். தற்போது சித்தார்த்துடன் டெஸ்ட்’ என்கிற படத்தில் இணைத்து நடித்து வரும் நயன்தாரா அந்த நட்பின் அடிப்படையில் இந்தப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.