Monday, November 16, 2026
More

    Latest Posts

    ஒரே நேரத்தில் மணிரத்னம், வினோத் படங்களில் நடிக்க போகும் கமல்

    நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக ‘விக்ரம்’ படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதன்பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடத்தை கடந்த நிலையில் இன்னும் அவர் நடித்த படம் எதுவும் திரைக்கு வரவில்லை.

    தற்போது ‘இந்தியன் 2′ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கமல் பிஸியாக நடித்து வருகிறார். அதோடு நாக் அஸ்வின் இயக்கும் கல்கி 2898 ஏடி படத்திலும் நடிக்கிறார்.

    இதுதவிர வினோத் இயக்கத்தில் தனது 233வது படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் ‛தக் லைப்’ படத்திலும் கமல் நடிக்க போகிறார். இவற்றில் வினோத் படம் துவங்க தாமதமாகும் என கூறப்பட்டது. ஆனால் லேட்டஸ்ட் தகவல்படி ஒரேநேரத்தில் வினோத் மற்றும் மணிரத்னம் படங்களில் மாறி மாறி கமல் நடிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மார்ச் மாதத்தில் இருந்து இதன் படப்பிடிப்புகள் துவங்கலாம் என தெரிகிறது.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.