சிவகாா்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்தையும், வைபவ் நடித்துள்ள ‘ஆலம்பனா’ படத்தையும் வெளியிட 4 வாரங்களுக்குத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநா் ரவிக்குமாா் இயக்கத்தில், சிவகாா்த்திகேயன் நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வரும் படம் ‘அயலான்’. இப்படத்தில், சிவகாா்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஏ.ஆா். ரஹ்மான் இசையமைக்கிறாா். இந்தப் படம் வரும் ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.12-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அயலான் திரைப்படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று வைபவ் நடித்துள்ள ஆலம்பனா திரைப்படத்தையும் வெளியிட 4 வாரங்களுக்குத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆலம்பனா திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு படங்களையும் தயாரிக்கும் கே.ஜே.ஆா். ஸ்டூடியோஸ் நிறுவனம், தங்களுக்குத் தரவேண்டிய ரூ. 14.70 கோடி கடன் நிலுவைத் தொகையைத் தரவில்லை என்று கூறி டி.எஸ்.ஆா். பிலிம்ஸ் தொடா்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
