Tuesday, November 17, 2026
More

    Latest Posts

    வைரமுத்து விவாகரம் – சின்மயிக்கு ஆதவராக பேசிய பாடகி

    பாடலாசிரியர் வைரமுத்து குறித்து பாடகி சின்மயி மீடூ புகார் தெரிவித்திருந்தார். தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் அவரை விமர்சித்துவருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில், ”முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி ஆகியோரைக் குறிப்பிட்டு பிரிஜ் பூஷணுக்கும் வைரமுத்துவுக்கும் விதிகள் வேறு கிடையாது. ‘

    நமது நாட்டின் சாம்பியன்கள், மல்யுத்த வீரர்கள் பிரிஜ் பூஷணின் பெயரைக் கூறினார்கள். அதே போல 17க்கும் பெண்கள் வைரமுத்துவின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்கள். உங்களுக்கும் உங்கள் கட்சிக்கும் நெருக்கமானவர். எங்கள் அனைவரது திறமையை விட வைரமுத்து திறமை பெரிதொன்றும் இல்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில் பாடகி புவனா சேஷன் என்பவரும் வைரமுத்துவுக்கு எதிராக பேசியுள்ளார். இதுதொடர்பாக புவனா சேஷன் ஏஎன்ஐ செய்திக்கு அளித்த பேட்டியில், ’ஏறக்குறைய 17 பெண்கள் வைரமுத்துவிற்கு எதிராக குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால் அதில் 4 பேர் மட்டுமே தைரியமாக தங்களது முகத்தையும், பெயரையும் வெளிக்காட்டியுள்ளனர்.

    நான் என் கதையை வெளியே சொல்வது இளம் பாடகர்களின் கனவுகள் உடையக்கூடாது என்பதற்காகத்தான். மற்ற பெண்களுக்கும் இது நேரக்கூடாது என்பதற்காகவே இதனை பகிர்கிறேன்.

    பாடகி சின்மயி உடைய தைரியம் வியக்க வைக்கிறது. வைரமுத்து மீது அவர் குற்றச்சாட்டு வைத்ததால் சமூக வலைதளங்களில் பலரும் அவரை தொடர்ச்சியாக வசை பாடினர். பல பெண்கள் இதனால் பாதிக்கப்படக்கூடாது. வைரமுத்துவுக்கு எதிராக எந்த விசாரணையும் நடைபெறபோவதில்லை. சிஸ்டம் அப்படி நடைபெறவிடாது. பாதிக்கப்பட்ட பெண்கள் சின்மயி போன்று தைரியமாக வெளியில் சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.