Wednesday, July 29, 2026
More

    Latest Posts

    பிரபல குணச்சித்திர நடிகர் திடீர் மரணம்!

    பிரபல குணச்சித்திர நடிகரும் இயக்குநருமான வி.சி. ஜெயமணி ( ஜூலை 29) சென்னையில் மாரடைப்பு காரணமாக காலமானார்.

    திருமதி செல்வம், சிறகடிக்க ஆசை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருக்கும் நடிகர் ஜெயமணி திடீர் மரணம் அடைந்திருப்பது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர்.

    முஸ்தபா, லக்கி மேன், சிங்கம் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். மேலும், சுமார் 40-க்கும் மேற்பட்ட சீரியல்களை இயக்கியுள்ளார்.

    இவர் தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் டப்பிங் யூனியனில் உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரிடையேயும், சின்னத்திரை ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.