Saturday, September 19, 2026
More

    Latest Posts

    ’நான் நடித்த படங்களையே பார்க்க மாட்டேன்’- ஷாருக்கான்

    மும்பை,

    பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான். இவர் தற்போது ’கிங்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஷாரூக்கான் சொன்ன ஒரு தகவல் தற்போது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது திரைப்பயணத்தில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தாலும், அவற்றில் சில படங்களை முழுமையாக பார்த்ததில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

    முழுப் படத்தையும் பார்த்ததில்லை
    இயக்குநர் சாஜித் கான் தொகுத்து வழங்கிய “யாரோன் கி பாரத்” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாரூக் கான், தனது சொந்த படங்களான தீவானா, ஸ்வதேஸ், பரதேஸ் உள்ளிட்ட பல வெற்றி படங்களை முழுமையாக பார்த்ததில்லை என கூறினார். டப்பிங் மற்றும் எடிட்டிங் பணிகளின் போது சில காட்சிகளை மட்டுமே பார்த்திருப்பதாகவும், ஒரு ரசிகரைப் போல தியேட்டரிலோ அல்லது வீட்டிலோ அமர்ந்து முழுப் படத்தையும் பார்த்ததில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    ‘கிங்’ படத்தில் மிரட்ட வரும் ஷாரூக்
    இதற்கிடையில், ஷாரூக் கானின் அடுத்த திரைப்படமான ’கிங்’ மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கும் இந்த திரைப்படம் டிசம்பர் 24-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தெரிகிறது. ஷாரூக் கானின் 60-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட ’கிங்’ படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதில், ஷாரூக் கான் மிரட்டலான தோற்றத்தில் காட்சியளித்தார்.

    மகளுடன் முதல் முறையாக இணையும் ஷாரூக்
    இந்த படத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், ஷாரூக் கான் தனது மகள் சுஹானா கானுடன் முதல் முறையாக ஒரே படத்தில் இணைந்து நடிக்கிறார். இதனால் ’கிங்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு
    ஏற்கனவே வெளியான போஸ்டர்கள் மற்றும் அறிமுக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஷாரூக் கான் – சுஹானா கான் கூட்டணி திரையில் எப்படியிருக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.