சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் படையப்பா.
பிளாக் பஸ்டர் ஹிட்டான இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், சிவாஜி, சௌந்தர்யா, லக்ஷ்மி, ராதா ரவி, நாசர் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர்.
மேலும் வில்லியாக இப்படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் அசத்திய ரம்யா கிருஷ்ணன், ரஜினிக்கு இணையாக அப்படத்தில் நடித்திருந்தார் என்றே கூறலாம்.
இந்நிலையில் படையப்பா படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்த நடிகை சித்ரா, ஆனால் அவருக்கு முன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வானதே நடிகை ஷாலினி அஜித் தானாம்.
மேலும் நடிகை ஷாலினி ரஜினியுடன் ராஜா சின்ன ரோஜா திரைப்படத்தில் சிறுவயதில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
