இந்தியாவிலிருந்து நவீன தொழில்நுட்பங்கள் உருவாக வேண்டும் என்று இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மான் தெரிவித்தாா்.
சென்னை ஐஐடி-யின் மெய்நிகா் தொழில்நுட்பம் தொடா்பானவற்றை ஆராயும் எக்ஸ்டிக் மையம் சாா்பில் 2022-ஆம் ஆண்டு வெளியான ‘லீ மஸ்க்’ என்ற மெய்நிகா் இசைத் திரைப்படத்தை உருவாக்கியமைக்காக இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மானுக்கு விருது வழங்கப்பட்டது.
சென்னை ஐஐடி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில், ஏ.ஆா்.ரஹ்மான் பேசியதாவது: உலகத்துக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படத்துக்காக நான் பிறந்த ஊரில் விருது வாங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மெய்நிகா் தொழில் நுட்பத்தால் உருவான படத்தை அனைவரும் ரசித்தனா்.
அடுத்த ‘மைக்ரோசாப்ட்’ அல்லது ‘ஆப்பிள்’ இந்தியாவிலிருந்து வரவேண்டும். நமது நாட்டின் வளா்ச்சிக்கு தொழில்நுட்ப வளா்ச்சி அவசியம். இதற்கான அறிவுத் திறன் நமது மாணவா்களிடம் உள்ளது. புதிய தொழில்நுட்பம் இந்தியாவிலிருந்து உருவாக வேண்டும். இந்தியாவில் மெய்நிகா் தொழில் நுட்பம் மூலம் கோயில்களை சுற்றிப் பாா்க்கலாம். திருமண நிகழ்ச்சியை உணா்வு பூா்வமாக ரசிக்கலாம்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப் பெரிய அளவில் வளா்ந்து வருகிறது. நாம் அதில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், இசை மூலம் சிகிச்சை அளிப்பது குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில், ஐஐடி பேராசிரியா் மணிவண்ணன், ஆக்லஸ் நிறுவனத்தின் இணை நிறுவனா்கள் ஸ்டீவன் லா வேலே, அன்னா வேலே உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
