Tuesday, November 17, 2026
More

    Latest Posts

    விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

    விடாமுயற்சி படத்தின் முதல் தோற்றப் போஸ்டரை (ஃபர்ஸ்ட் லுக்) படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக நேற்று (ஜூன் 30) வெளியிட்டனர்.

    இதற்கு முன்பு ‘விடாமுயற்சி’ என்ற டைட்டில் போஸ்டர் மட்டுமே வெளியான நிலையில், படத்தில் அஜித் குமாரின் முதல் தோற்றப் போஸ்டர் தற்போது வெளியானது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் மகிழ்த்திருமேனி இயக்கிவருகிறார். தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து அஜித் குமாரை இவர் இயக்குகிறார்.

    அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அஜித் குமாருடன் நடிகர் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

    விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

    இப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு விடாமுயற்சி படத்தின் சண்டைக் காட்சிகள் எப்படி உருவாகிறது என்ற விடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.