Monday, November 16, 2026
More

    Latest Posts

    முருகன் கோயிலில் பிரேம்ஜி திருமணம்!

    திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் புகழ்பெற்ற முருகன் கோயில் வளாகத்தில் திரைப்பட இயக்குனர் கங்கை அமரன் மகனும் நடிகருமான பிரேம்ஜி – இந்து திருமணம் மிகவும் எளிமையான முறையில் இன்று காலை நடைபெற்றது.

    கங்கை அமரன் அவரது மூத்த மகன், திரைப்பட இயக்குனர் வெங்கட் பிரபு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரின் குடும்பத்தினர் மற்றும் திரைப்பட நடிகர்கள் சிவா, சந்தான பாரதி, ஜெய், கார்த்திக் ராஜா உட்பட திரைப்பட நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    திருமணம் நடைபெற்று மணமக்கள் முருகப்பெருமானை தரிசித்து வழிபட்டனர். முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற பிரேம்ஜி திருமணத்தில் பங்கேற்ற திரைப்பட நட்சத்திரங்களை காண சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    மேலும் செய்திகள்
    ஜவஹர்லால் நேருக்கு பிறகு 3வது முறையாக, பிரதமராக மோடி பதவியேற்பது மகத்தான சாதனை
    “நான் நடித்த பல படங்களில் முழுமையான சம்பளம் வந்து சேரவில்லை ” – விஜய் சேதுபதி!
    நடிகைகளுக்குள் போட்டி இருப்பதை வரவேற்கிறேன் : தமன்னா

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.