Tuesday, November 17, 2026
More

    Latest Posts

    மீண்டும் வெளியான ராஷ்மிகாவின் டீப் பேக் வீடியோ

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கவர்ச்சி நடிகையின் முகத்தை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தோடு இணைத்து டீப் பேக் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை தொடர்ந்து ஆலியா பட், கஜோல், கத்ரீனா கைப் உள்ளிட்டோரில் டீப் பேக் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதையடுத்து புகார்கள் குவிந்த நிலையில் மத்திய சைபர் கிரைம் இது குறித்த நடவடிக்கையில் இறங்கியது. என்றாலும் டீப் பேக் வீடியோக்கள் வெளியாவதை தடுத்து நிறுத்த முடியவில்லை.

    இந்த நிலையில் தற்போது மீண்டும் ராஷ்மிகாவின் டீ பேக் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், சிவப்பு நிற பிகினி உடை அணிந்து அவர் ஒரு அருவியின் கீழ் நிற்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. ஆனால் அது அவருடையது அல்ல. கொலம்பியா மாடல் அழகி டேனியேலா என்பவரின் முகத்தை நீக்கிவிட்டு ராஷ்மிகாவின் முகத்தை தொழில்நுட்பத்தின் மூலம் இணைத்து வெளியிட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.