இயக்குநர் பாயல் கப்படியாவின் (Payal Kapadia) முதல் திரைப்படமான ‘All We Imagine as Light’ படத்துக்கு Grand Prix விருது கிடைத்தது.
Cannes திரைப்பட விழாவில் வழங்கப்படும் 2ஆம் ஆக பெரிய அங்கீகாரமாக Grand Prix விருது கருதப்படுகிறது.

அத்தகைய விருதைப் பெற்ற முதல் இந்தியப் பெண் இயக்குநர் என்ற பெருமை கப்படியாவைச் சேரும்.
விருது அவருடைய திறமையை மட்டும் அங்கீகரிக்கவில்லை.. திரைப்படங்களைத் தயாரிக்க விரும்பும் மற்ற இந்தியர்களையும் ஊக்குவிக்கிறது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) X தளத்தில் குறிப்பிட்டார்.
மோகன்லால், மம்மூட்டி போன்ற நடிகர்களும் கப்படியாவைப் பாராட்டினர்.
All We Imagine as Light திரைப்படம் மும்பையில் ஊர் விட்டு ஊர் வந்து வேலை செய்யும் தாதிகள் இருவரின் கதையைக் கூறுகிறது.
மும்பையில் முக்கியப் பங்கு வகிக்கும் வெளியூர் ஊழியர்களை அங்கீகரிக்கும் படமாக அது விளங்குகிறது.
