Monday, November 16, 2026
More

    Latest Posts

    ரஷ்யா பறக்கும் ‛குட் பேட் அக்லி’ படக்குழு

    விடாமுயற்சி படம் பாதியில் நிற்கும் நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் தனது 63வது படமாக ‘குட் பேட் அக்லி’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதனை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் நாயகியாக நயன்தாரா நடிப்பதாக கூறப்படுகிறது. தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கின்றார்.

    இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து குட் பேட் அக்லி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் சுமார் இரண்டு வாரங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் முழுக்க ஆக்ஷன் காட்சிகளை மட்டும் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.