Monday, November 16, 2026
More

    Latest Posts

    ‛தக் லைப்’ : சிம்பு நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

    நாயகன் படத்தின் வெற்றிக்கு பின் 37 ஆண்டுகள் கழித்து நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் ‛தக் லைப்’. இதன் அறிமுக டீசரை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

    த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இவற்றில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதேசமயம் இந்த படத்தில் சிம்புவும் நடிப்பதாக தகவல் வந்த நிலையில் படக்குழுவினர் அதை அறிவிக்கவில்லை. ஆனால் டில்லியில் நடந்து வரும் இதன் படப்பிடிப்பில் சிம்பு பங்கேற்ற புகைப்படங்கள் லீக்காகி வைரலாகின.

    இந்நிலையில் இந்த படத்தில் சிம்பு நடிப்பதாக தக் லைப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவரின் அறிமுக டீசர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் எல்லையை காக்கும் பேட்ரோல் வண்டியில் புழுதி பறக்க காரில் வரும் சிம்பு கையில் துப்பாக்கியை வைத்து யாரையோ சுடுவது போன்று வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி டிரெண்ட் ஆனது.

    More News👇

    பிறந்தநாளில் பிணமாக படம் வெளியிட்ட அப்புக்குட்டி

    எனக்கான பட வாய்ப்புகள் குறையவில்லை : சோனியா அகர்வால்

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.