Monday, November 16, 2026
More

    Latest Posts

    பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

    கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய பிரதீப் ரங்கநாதன், ‘லவ் டுடே’ படத்தின் மூலம் நடிகரானார்.

    இதனைத் தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சுரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும், பிரதான பாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.

    இந்நிலையில், ‘ஓ மை கடவுளே’ படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார். இதனை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    பிரதீப் ரங்கநாதனும், அஸ்வத் மாரிமுத்தும் இனைந்து படம் எடுக்க வேண்டும் என்று 10 வருடங்களுக்கு முன்பே முடிவு செய்ததாக அறிவிப்பு விடியோவில் பிரதீப் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் டிராகன் என படக்குழுவினர் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

    More News👇

    விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது

    ‛கூலி’க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து

    விஜய் மகன் படத்தில் நடிக்க அழைத்தது உண்மைதான் : கவின்

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.