Monday, November 16, 2026
More

    Latest Posts

    200 மில்லியன் சாதனைகளைக் கடந்த ‘ஹனுமான்’

    தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி மற்றும் பலர் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘ஹனுமான்’. இப்படம் ஓடிடியில் வெளியான ஒரே நாளிலேயே 100 மில்லியன் நிமிடப் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்தது. தற்போது 200 மில்லியன் பார்வைகளை ஐந்து தினங்களில் கடந்துள்ளது.

    ஓடிடி தளத்தில் தெலுங்கு, மட்டும்தான் வெளியாகியுள்ளது. மற்ற மொழிகளில் இன்னும் வெளியாகவில்லை. தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகி இருந்தால் இன்னும் அதிகமான பார்வைகளை ஓடிடி தளத்தில் பெற்றிருக்கலாம்.

    சில தின இடைவெளியில் ஒவ்வொரு மொழியாக ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. விரைவில் மற்ற மொழிகளில் ஓடிடியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.