Monday, November 16, 2026
More

    Latest Posts

    விஜய்யின் ‛கோட்’ படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய திரிஷா!

    நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்த திரிஷா, தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என்று மீண்டும் பிஸி ஆகிவிட்டார்.

    இந்த நிலையில் லியோ படத்தை அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் ஒரு பாடல் காட்சியில் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடனமாடுவதாக தகவல் வெளியாகின. என்றாலும் அந்த தகவலை அப்படக்குழு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

    இந்நிலையில் அந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், கோட் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருக்கும் திரிஷா, சென்னையில் படப்பிடிப்பில் இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

    More News👇

    “மயோசைட்டிஸால் பாதிக்கப்பட்டதைப் பொதுவெளியில் சொல்ல வேண்டிய கட்டாயம் வந்தது!” – சமந்தா

    கேரள ரசிகர்களைச் சந்திக்கும் விஜய்!

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.