ஹாலிவுட்டின் 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இம்முறை லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இம்முறை ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், சிறந்த ஆடை வடிவமைப்பு விருதுக்கான பரிந்துரைகளை அறிவிக்க ஜான் சினா (John Cena) நிர்வாணமாக மேடைக்கு வந்தமை , விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற அனைவரையும் ஆச்சரியத்தையும், சிரிப்பையும் ஏற்படுத்தியது.
ஜான் சினா ஆஸ்கார் விழாவில் நிர்வாணமாக கலந்துகொள்ளும் முதல் நபர் அல்ல, 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற 46வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஒரு ஸ்ட்ரீக்கர் (Streaker) கலந்துகொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டின் 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை ஓப்பன்ஹெய்மர் (Oppenheimer) படத்தில் நடித்த சிலியன் மர்பியும் (Cillian Murphy) , சிறந்த படத்திற்கான விருதை ஓப்பன்ஹைமர் படத்தை இயக்கிய கிறிஸ்டோபர் நோலனும் (Christopher Nolan) பெற்றனர்.
More News👇
