Monday, November 16, 2026
More

    Latest Posts

    புதிய அப்டேட் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய சமந்தா

    உடல்நிலை காரணமாக திரைப்படங்களில் நடிப்பதற்கு ஓய்வு கொடுத்துள்ளார் நடிகை சமந்தா. அவரது அடுத்தப் படம் எப்போது வெளியாகும்? யார் அதனை இயக்குகிறார்கள்? என்பதனை அறிய சமந்தா ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில், தனது நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் இணையத் தொடர் குறித்த அப்டேட்டை வெளியிட்டு, ரசிகர்களை சமந்தா குஷிப்படுத்தியுள்ளார்.

    ஹாலிவுட்டில் தயாரான இணையத்தொடர் சிட்டாடல். சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட பிரமாண்ட ஆக்ஷன் தொடரான இதில் ரிச்சர்ட் மேட்டன், ப்ரியங்கா சோப்ரா இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 2023 ஏப்ரல் 28 இது அமேசான் பிரைம் பீடியோவில் ஒளிபரப்பானது. இரண்டாவது எபிசோட் ஒளிபரப்பானதும், சிட்டாடலின் இரண்டாவது சீஸன் குறித்து அறிவிக்கப்பட்டது. பிரபல இயக்குநர் ஜோ ரூஸோ இந்த இரண்டாம் சீஸனை இயக்குவார் என அறிவித்தனர்.

    சிட்டாடல் கதை சர்வதேசத்தன்மை கொண்டதால் அதனை இத்தாலி, இந்தி உள்பட பல மொழிகளில் எடுக்கின்றனர். இந்தியில் அதனை ராஜ் & டிகே இயக்கியுள்ளனர். தி பேமிலி மேன், பார்ஸி, கன்ஸ் அண்ட் குலாப்ஸ் இணையத் தொடர்களின் மூலம் கவனம் பெற்ற இந்த இயக்குநர் இணை சிட்டாடல் இந்தி வெர்ஷனின் முதல் சீஸனை முடித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனை உறுதி செய்வது போல், சிட்டாடல் குழுவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் சமந்தா, ‘கடைசியில், நாங்கள் பார்ப்பதற்கு கொஞ்சம் கிடைத்திருக்கிறது. அனைவருக்கும் மகிழ்ச்சி’ என்று பதிவிட்டுள்ளார்.

    இதன்மூலம், சமந்தா நடிப்பில் முதலில் வெளிவரவிருப்பது சிட்டாடல் இணையத் தொடர் என்பது உறுதியாகியிருக்கிறது. இதற்கு முன் ராஜ் & டிகே இயக்கத்தில் தி பேமிலி மேன் இரண்டாவது சீஸனில் ஈழப் போராளியாக சிறப்பான நடிப்பை சமந்தா வழங்கியிருந்தார். இது அவர்களுடன் இணையும் இரண்டாவது இணையத் தொடராகும்.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.