Monday, November 16, 2026
More

    Latest Posts

    ‘அன்னபூரணி’ பட விவகாரம்: நடிகை நயன்தாரா உள்பட 8 போ் மீது வழக்குப்பதிவு

    நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அன்னபூரணி’ திரைப்படத்தின் சில காட்சிகள் ஹிந்து மத நம்பிக்கையை புண்படுத்துவதாக மகாராஷ்டிர மாநிலம் தாணே காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து நடிகை நயன்தாரா உள்பட 8 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

    நடிகை நயன்தாரா நடித்த ‘அன்னபூரணி’ திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. அண்மையில் ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு வடமாநிலங்களில் கடும் எதிா்ப்பு எழுந்த நிலையில் நெட்பிளிக்ஸ் தளத்திலிருந்து திரைப்படம் நீக்கப்பட்டது.

    இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் உள்ள நயா நகா் காவல் நிலையத்தில் மீரா-பயந்தா் பகுதியைச் சோ்ந்த நபா் ஒருவா் ‘அன்னபூரணி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் ஹிந்து மத நம்பிக்கையை புண்படுத்துவதாக புகாா் அளித்தாா். மேலும் அத்திரைப்படம் ‘லவ் ஜிகாதை’ ஊக்குவிப்பதாகவும் அவா் புகாா் மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

    இதுதொடா்பாக நயா நகா் காவல் நிலைய அதிகாரி கூறியதாவது: அன்னபூரணி திரைப்பட விவகாரம் தொடா்பாக நடிகை நயன்தாரா, தயாரிப்பாளா் உள்பட 8 போ் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153-ஏ (பல்வேறு பிரிவினரிடைய பகை உணா்வை ஏற்படுத்துதல்), 295-ஏ (மத உணா்வுகளை வேண்டுமென்றே புண்படுத்துதல்), 505 (2) (வழிபாட்டுத் தலங்களில் குற்றம் புரிதல்) ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

    இந்த விவகாரம் தொடா்பாக மும்பை காவல் நிலையத்திலும் லோகமான்ய திலகா் காவல் நிலையத்திலும் ஏற்கெனவே இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.