நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவின் இரு பெரும் ஜாம்பவான்களான கமல், மணிரத்னம் இருவரும் இணைந்துள்ளனர். கோலிவுட் வட்டாரத்தினர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது இந்த காம்போ. இப்படத்திற்கான ‘தக் லைப்’ என்ற டைட்டில் அறிவிப்பு வீடியோ கமலின் பிறந்தநாளன்று வெளியாகி அமோக வரவேற்பினை பெற்றது.
‘விக்ரம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் செம்ம பிசியாகி விட்டார் கமல். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான கமலின் இப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு கமலிக்கு தேவையான வணிக ரீதியாக வெற்றியை இப்படம் கொடுத்தது. இதன் பிறகு தான் இயக்கம், தயாரிப்பு, பிக்பாஸ் என பிசியாக இயங்கி வருகிறார்.
‘விக்ரம்’ வெற்றிக்கு பின்னர் உடனடியாக புதிய படம் எதிலும் கமிட்டாகாத கமல், ஏற்கனவே துவங்கப்பட்ட ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க ஆரம்பித்தார். கொரோனாவிற்கு முன்பிருந்தே இப்படத்தின் வேலைகள் நடந்து வருகின்றன. இடையில் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து, ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து ஷுட்டிங் நடத்துவது தடைப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு இதன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது. தற்போது படத்தின் ஷுட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையில் எச். வினோத், மணிரத்னம் ஆகியோரின் இயக்கங்களிலும் படம் நடிக்க கமிட் ஆனார் கமல். இதில் எச். வினோத் படம் எப்போது துவங்கும் என்பது குறித்த எந்த தகவலும் இல்லை. அதே நேரத்தில் ‘KH 233’ படத்திற்கு பின்பாக அறிவிக்கப்பட்ட மணிரத்னம் படத்தின் டைட்டிலே வெளியாகிவிட்டது.
‘நாயகன்’ என்ற எவர்கிரீன் ஹிட் படத்தை தொடர்ந்து 35 ஆண்டுகளுக்கு பிறகு கமல், மணிரத்னம் இணைந்துள்ள படத்திற்கு ‘தக் லைப்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஷுட்டிங் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த மாத இறுதியில் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையில் ‘கல்கி 2898AD’ படத்தின் மீதமுள்ள 17 நாட்களின் ஷுட்டிங்கிலும் கமல் பங்கேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், மணிரத்னம் இயக்கும் படத்தின் ஷுட்டிங் முடிந்த பின்னர் தான் எச். வினோத் இயக்கும் ‘KH 233’ படத்தின் வேலைகள் துவங்கும் எனவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
