Tuesday, November 17, 2026
More

    Latest Posts

    மார்ச் மாதத்தில் வெளியாகும் தங்கலான் படம்

    பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் தற்போது இதன் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இத்திரைப்படம் 2024 ஜனவரி 26ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பட பணிகள் முடியாததால் தற்போது தள்ளிப் போவதாக தகவல் வெளியானது.

    இப்போது கிடைத்த புதிய தகவலின்படி இப்படம் 2024 மார்ச் 29ம் தேதி புனித வெள்ளி தினத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.