Tuesday, November 17, 2026
More

    Latest Posts

    மகளுடன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் ஷாரூக்கான்

    நடிகர் ஷாரூக்கான் இந்திய சினிமாவில் முக்கிய நடிகர். இந்தாண்டில் அவர் நடித்து வெளிவந்த பதான், ஜவான் படங்கள் தொடர்ந்து வெற்றியடைந்தது. தற்போது ‘டன்கி’ என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதத்தில் திரைக்கு வருகிறது.

    இந்த நிலையில் ஷாரூக்கான் முதன்முறையாக அவரது மகள் சுஹானா கான் உடன் இணைந்து நடிக்கவுள்ளார். இதனை கஹானி பட இயக்குனர் சுஜாய் ஜோஷ் இயக்குகிறார். அப்பா, மகள் உறவு குறித்து உருவாகும் இப்படத்திற்கு ‘கிங்’ என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் துவங்குகிறது. இதன் ஆக்ஷன் காட்சிகளை மட்டும் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.