Monday, November 16, 2026
More

    Latest Posts

    மீண்டும் சிரஞ்சீவிக்கு ஜோடியான த்ரிஷா

    பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு த்ரிஷா தனது இரண்டாவது ரவுண்டை அடித்து ஆடிக் கொண்டிருக்கிறார். ‘லியோ’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். ‘தி ரோட்’ என்ற படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்து வருகிறார். ‘ராம்’ என்ற மலையாள படத்தில் நடிக்கிறார். அடுத்து அஜித் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    தற்போது சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க இருக்கிறார். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘புரோ டாடி’ என்ற படத்தின் ரீமேக்காக இந்த படம் தயாராகிறது. இதில் சிரஞ்சீவி மனைவியாக த்ரிஷா நடிக்கிறார். 50 வயதை கடந்த பிறகு ஒரு குழந்தைக்கு தந்தையாகும் கதை. அதே நேரத்தில் அவரது மகனும் தந்தை ஆகிறார். மலையாளத்தில் மோகன்லால் மகனாக பிருத்விராஜ் நடித்திருந்தார். ரீமேக்கில் நடிப்பது யார் என்று இன்னும் அறிவிக்கவில்லை.

    2006ம் ஆண்டு ஸ்டாலின் என்ற படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடித்திருந்தார் த்ரிஷா. தற்போது 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார்.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.