விஜய் டிவியில் நடந்துவந்த சூப்பர் சிங்கர் 9ஆவது சீசனில் சீர்காழியை சேர்ந்த அருணா டைட்டிலை வென்றார்.
விஜய் டிவியில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். அப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் பலரது விருப்பத்துக்குரிய நிகழ்ச்சியாக இருக்கிறது. இதுவரை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எட்டு சீசன்கள் நடைபெற்றிருக்கிறது. இதனையடுத்து 9ஆவது சீசன் கடந்த சில வாரங்களாக மும்முரமாக நடந்துவந்தது.
டைட்டில் வின்னர்: ஐந்து பேருமே சிறப்பாக பாடினாலும் அருணா ஒருபடி மேலே நன்றாக பாடியதால் அவர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரசிகர்களின் வாக்குகள், நடுவர்களின் மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து அருணா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.
இதுவரை நடந்த எட்டு சீசன்களில் ஒரு பெண்கூட டைட்டிலை வென்றதில்லை. தற்போது அருணா வென்றிருப்பதன் மூலம் சூப்பர் சிங்கர் டைட்டிலை வென்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் அவர்.

பரிசு: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை பூர்வீகமாக கொண்ட அருணாவுக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடும், பத்து லட்சம் ரூபாய் ரொக்கமும் பரிசாக கொடுக்கப்பட்டது. மேலும் சூப்பர் சிங்கரில் வென்றால் திரைப்படங்களில் பாட வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் சூழல் இருப்பதால் அருணாவுக்கு நிச்சயம் திரைத்துறையின் கதவு திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டைட்டிலை வென்ற அருணாவுக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர்.
இறுதிப்போட்டி: விறுவிறுப்பாக நடந்த சூப்பர் சிங்கரில் இறுதிப்போட்டிக்கு அருணா, அபிஜித், பூஜா, பிரியா, பிரசன்னா ஆகிய ஐந்து பேர் தேர்வானார்கள்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக இன்று இறுதிப்போட்டி நடந்தது. இதில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சிறப்பு விருந்தினராக கலலந்துகொண்டார்.இறுதிப்போட்டி பல சுற்றுக்களாக நடைபெற்றது.
பல சுற்றுக்கள்: சூப்பர் சிங்கரில் வென்றால் திரைப்படங்களில் பாடுவதற்கான வாய்ப்பு எளிதாக கிடைக்கும் சூழல் உருவாகியிருப்பதால் இறுதிப்போட்டிக்கு தேர்வான அபிஜித், அருணா, பூஜா, பிரியா, பிரசன்னா ஆகிய ஐந்து பேரும் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்தி பாடினர்.
இதனால் ஒவ்வொரு சுற்றிலும் அனல் பறந்தது. அவர்களது ஃபெர்பார்மன்ஸை பார்த்த பலரும் ஐந்து பேரும் இப்படி பாடினால் யாரை வெற்றியாளராக தேர்வு செய்வது என்று குழம்பித்தான் போனார்கள்.

டைட்டில் வென்ற அருணா: இந்தச் சூழலில் இந்த சீசனின் ஆரம்பத்திலிருந்தே கலக்கி வந்த அருணாவின் ஃபெர்பார்மன்ஸ் மற்றவர்களைவிட ஒரு படி மேலே இருந்தது. இதன் காரணமாக அவர் சூப்பர் சிங்கர் 9ஆவது சீசனின் டைட்டில் வின்னர் ஆனார். ரசிகர்களின் வாக்குகள், நடுவர்களின் மதிப்பெண்களை வைத்து அவர் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை ஹாரிஸ் ஜெயராஜ் பரிசளித்தார். இந்த டைட்டிலை வென்றதன் காரணமாக இப்போது புகழின் உச்சியில் இருக்கிறார் அருணா.
முதல் பெண்: இதுவரை நடந்த சூப்பர் சிங்கரின் 8 சீசன்களிலும் ஆண்கள் மட்டுமே டைட்டிலை தட்டி சென்றிருக்கின்றனர். ஒன்பதாவது சீசனில் டைட்டிலை வென்றதன் மூலம் சூப்பர் சிங்கர் டைட்டிலை வெல்லும் முதல் பெண் என்ற பெருமையை பெறுகிறார் அருணா.
இவர் சீர்காழி மயிலாடுதுறையை பூர்வீகமாகக் கொண்டவர். இந்த டைட்டிலை வென்றதற்கு பிறகு அருணாவுக்கு திரைத்துறையில் பாடல்கள் பாட வாய்ப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தடுத்த இடங்கள்: அருணா டைட்டிலை வென்ற சூழலில் ப்ரியா ஜெர்சன் இரண்டாவது இடத்தையும், பிரசன்னா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே சமூக வலைதளங்களில் விருப்பத்துக்குரியவராக இருந்தவர் பூஜா வெங்கட்ராமன். நிச்சயம் பூஜா டைட்டிலை வெல்வார் இல்லை முதல் மூன்று இடங்களில் ஒன்றை பிடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவருக்கு நான்காம் இடம் மட்டுமே கிடைத்தது.
என்னென்ன பரிசு: முதல் இடம் வென்ற அருணாவுக்கு வீடு பரிசாக வழங்கப்பட்டதைப்போல, இரண்டாம் இடம் பெற்ற ப்ரியா ஜெர்சனுக்கு பத்து லட்சம் ரூபாய் ரொக்கமும், மூன்றாம் இடம் பிடித்த பிரசன்னாவுக்கு ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கமும் பரிசாக வழங்கப்பட்டது.
