Tuesday, November 17, 2026
More

    Latest Posts

    ”எங்கே என்ன பேச வேண்டும் என எனக்கு தெரியும்” -சித்தார்த்த பதிலடி

    கோவை ப்ரோட்வே மாலில் “டக்கர்” திரைப்படத்தை அப்படத்தின் ஹீரோவான சித்தார்த் ரசிகர்களுடன் பார்த்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சித்தார்த்,”டக்கர் திரைப்படம் பொழுதுபோக்காக, ஜாலியாக, பாப் கார்ன் சாப்பிட்டு கொண்டே பார்ப்பதற்கான படம். 2k கிட்ஸ்களுக்கு பிடித்தமான கமர்சியல் படம். முதல்முறையாக இந்த படத்தில் ஆக்சன் செய்திருக்கிறேன்.

    என்னைப் பொறுத்தவரை யாரெல்லாம் இளமையாக நினைக்கிறார்களோ, அவர்கள் அனைவரும் இளைஞர்கள் தான். கோவையை சேர்ந்த இளைஞர்கள் அனைவரும் நண்பர்களுடன் திரையரங்குகளுக்கு வந்து இந்தப் படத்தை பாருங்கள். இந்தப் படத்தை ரசிகர்கள் திரையரங்கில் கைதட்டி, சிரிப்புடன் ரசித்து பார்க்கின்றனர்.

    யோகிபாபு அதிக சம்பளம் வாங்கி கொண்டு சிரிக்க வைக்கும் நடிகர். மக்களை சிரிக்கவைப்பது மிகவும் கடினம். பொதுமக்கள் பொழுதுபோக்கு படங்களை ரசித்தால், நாங்களும் பொழுதுபோக்கு படங்களை எடுக்க வசதியாக இருக்கும். காதல் படங்களில் இது ஒரு வித்தியாசமான காதல் படம். அடுத்ததடுத்து ஆக்சனுக்கு செல்வது பார்வையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் கையில் தான் உள்ளது.

    பாய்ஸ் திரைப்படம் வெளியாகி இருபது ஆண்டுகள் ஆகியுள்ளது, 20 ஆண்டுகள் என்பதை 2.0 ஆக எடுத்துக்கொள்கிறேன். பான் இந்தியா படமாக மட்டும் அல்லாமல் பான் வேர்லட் ஆக படங்கள் பார்க்கபட வேண்டும். தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறேன். இசைக்கு அனைத்து படங்களிலும் எப்பவும் முக்கியத்துவம் கொடுப்பேன். அரசியல் விமர்சனங்கள் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த நடிகர் சித்தார்த், எங்கே என்ன பேச வேண்டும் என எனக்கு தெரியும். அதை அங்கே பேசிக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.