Tuesday, November 17, 2026
More

    Latest Posts

    வடிவேலுக்கும், பி. வாசுக்கும் இடையே கருத்து வேறுபாடா?

    இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சந்திரமுகி 2. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் கங்கனா ரணவாத், லட்சுமி மேனன், வடிவேலு ஆகியோர் நடிக்கின்றனர்.

    சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது வடிவேலுக்கும், பி.வாசுவுக்கும் கருத்துவேறுபாட்டால் மோதல் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பில் வடிவேலுவை வாசு கடுமையான வார்த்தைகளில் திட்டினார் என செய்திகள் இணையதளங்களில் பரவின. இந்நிலையில் இதுபற்றி இப்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இருவருக்கும் எந்த மோதலும் ஏற்படவில்லை. மைசூர், ஐதராபாத், மும்பை உட்பட பல இடங்களில் நடந்த படப்பிடிப்பில் வடிவேலு கலந்து கொண்டு முடித்துக் கொடுத்துவிட்டார். ‘சந்திரமுகி-2’ படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்கிறார்கள்.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.