Monday, November 16, 2026
More

    Latest Posts

    பிக்பாஸ் நிகழ்ச்சியை புகழ்ந்த விக்ரமன் : விக்ரமனை புகழ்ந்த பிக்பாஸ்

    பிக்பாஸ் 6 ஃபைனலிஸ்ட்டுகளை ஃபீல் செய்து கண் கலங்க வைத்து ப்ரொமோ வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.

    பிக் பாஸ் 6 வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தங்கள் சொந்த வீட்டிற்கு செல்ல இன்னும் சில நாட்களே இருக்கிறது. இந்நிலையில் அந்த போட்டியாளர்களின் நல்ல குணங்களை பற்றி பேசி, பாராட்டி, வாழ்த்துகிறார் பிக் பாஸ். இதை கேட்டு அவர்கள் அழுதுவிடுகிறார்கள். இன்று காலை வெளியான ப்ரொமோ வீடியோவில் அசீம் அழுதார். இதையடுத்து மீண்டும் ஒரு ஃபீலிங் வீடியோ வந்திருக்கிறது.

    இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் விக்ரமனை காட்டியிருக்கிறார்கள். சக மனிதரை மதிக்கத் தெரிந்த தோழரை அடையாளம் காட்டியதில் எனக்கு மகிழ்ச்சி என பிக் பாஸ் பேசத் துவங்கியதுமே விக்ரமன் அழ ஆரம்பித்துவிட்டார். தமிழ்நாட்டின் மிக பிரமாண்ட ஷோ என்பதை தாண்டி ரொம்பத் தேவையான ஷோவாக பிக் பாஸ் இருக்கு. ஒரு ஜனரஞ்சகமான மேடையில் எளிய குரல்களுக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள் என்றால் இது சாதாரண விஷயம் அல்ல. இது ஒரு புரட்சி என்றார் விக்ரமன்.

    விக்ரமன் பயங்கர ஃபீலிங்குடன் பேசியதை கேட்ட பிக் பாஸோ, இதென்ன புரட்சி. நீங்க வெளியுலகத்திற்கு போய் செய்யப் போகிற புரட்சிகளை பார்ப்பதற்கு நான் ஆவலாக இருக்கிறேன் என்றார். அதை கேட்ட விக்ரமன் குஷியாகி, அறம் வெல்லும் என்று சந்தோஷமாக கூறியதுடன் ப்ரொமோ வீடியோவை முடித்துக் கொண்டார்கள்.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.