Sunday, November 15, 2026
More

    Latest Posts

    நடிகை பிரியா பவானி சங்கருக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம்? வைரலாகும் புகைப்படங்கள்!

    நடிகை பிரியா பவானி சங்கர் மற்றும் அவரது நீண்ட கால காதலரான ராஜவேல் ராஜ் ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பிரியா பவானி சங்கர்
    பிரியா பவானி சங்கர் கடந்த 2017 ம் ஆண்டு வெளியான “மேயாத மான்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம், யானை, திருச்சிற்றம்பலம், பத்து தல, டிமான்டி காலனி 2 என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

    சமீபத்தில் ரவி தேஜா நடிப்பில் வெளியான “இருமுடி” திரைப்படத்தில் பிரியா பவானி சங்கரின் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது. பிரியா பவானி சங்கர் நடித்த ‘டிமான்டி காலனி 3’ படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது.

    கல்லூரி காலத்து காதல் பயணம்
    பிரியா பவானி சங்கரும் ராஜ்வேல் ராஜும் கல்லூரி காலத்திலிருந்தே ஒருவரையொருவர் அறிவர் என்பதும், கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் காதலித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஊடகங்கள் மற்றும் பொதுவெளியில் தங்களது காதல் உறவை வெளிப்படையாகவே இருவரும் எப்போதோ உறுதிப்படுத்தியிருந்தனர். சினிமா துறையில் பிசியாக இருந்தாலும் தங்களது தனிப்பட்ட உறவுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து வந்த இந்த ஜோடி, தற்போது தங்களது உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.

    நடிகை பிரியா பவானி சங்கர் தனது ராஜவேலு என்பவருடன் நீண்டகாலமாகக் காதலில் இருந்து வருகிறார். இருவரும் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது இருவருக்கும் ரகசியமாக திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ரகசியமாக நடந்தா திருமண நிச்சயம் ?
    காதலர் ராஜ்வேலுடன் பிரியா பவானி சங்கரின் புகைப்படங்கள் வெளியானதே இதற்கு காரணமாக அமைந்துள்ளது. பிரியா பவானி சங்கர் மற்றும் அவரது காதலர் ராஜவேல் இருவரும் இணைந்து காணப்படும் இந்த புகைப்படத்தில் பிரியா பவானி சங்கர் முகத்தில் மஞ்சல் பூசப்பட்டிருக்கிறது. மேலும் பிரியா பவானி சங்கர் கையில் மருதானி வைத்துள்ளார். ராஜவேல் பிரியா இருவரும் மாலை அணிந்தபடியும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதனால் இருவருக்கும் ரகசியமாக குடும்பத்தினர் மத்தியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதாக பலரும் கூறி வருகிறார்கள். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.