ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைப்படம் இந்திய அளவில் ரூ. 309 கோடி வசூலித்துள்ளதாக இன்று (ஆகஸ்ட் 3) அறிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் உருவான ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை பிரம்மாண்டமாக வெளியானது. ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் டாம் ஹாலண்டும் நாயகியாக ஜெண்டயாவும் நடித்துள்ளதால் இந்த இணைக்கான ரசிகர்களும் பெரிய ஆவலுடன் படத்தை பார்த்தைப் பார்த்து வருகின்றனர்.
உலகளவில் வெளியான இந்தத் திரைப்படம் இந்திய அளவில் முதல் நாள் வசூலாக ரூ. 70 கோடி வரை வசூலித்துள்ளதாகக் கூறப்பட்டது. இரண்டாம் நாள் வசூலாக ரூ. 216 கோடி வரை வசூலித்து, பல பான் இந்திய நடிகர்களின் இரண்டு நாள் வசூலைத் தாண்டியுள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இப்படம் இந்திய அளவில் ரூ. 309 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும், உலகளவில் ரூ. 1,700 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
