Wednesday, August 5, 2026
More

    Latest Posts

    உயிரோடு இருக்கும் வரை இனி சேரப்போவதில்லை: ரவி மோகன்

    நடிகர் ரவி மோகன் தன் குடும்பம் குறித்து பதிவிட்டுள்ளார்.

    நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து பெறுவதற்கான முயற்சிகளில் இருப்பதால் கடந்த ஓராண்டாகவே சமூக வலைதளங்களில் பேசுபொருளாக உள்ளார். மனைவியைப் பிரிந்தவர் பாடகி கெனிஷாவுடன் இணைந்து வாழ்ந்து வந்தார். இருவரும் பொது நிகழ்வுகளில் ஒன்றாகக் கலந்துகொள்வது; புரமோஷன்களுக்கு வருவது என ஜோடியாக இருந்தனர்.

    ஆனால், சில மாதங்களுக்கு முன் கெனிஷா, எனக்கு யாரும் வேண்டாம் என ரவி மோகனையும் பிரிந்தார். தொடர்ந்து, விவாகரத்து கிடைக்கும் வரை திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றார். ஆனால், ரசிகர்களின் கோரிக்கைகளுக்காக மீண்டும் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில், நண்பர்களான நாளான இன்று தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உண்மையான நண்பர்களைப் போல என்னுடன் நின்ற மிகவும் அன்பானவர்களுக்கு இனிய நண்பர்கள் நாள் வாழ்த்துகள்.

    சிலர் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்புச் செயல்களில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரை ஒன்றைத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். நான் உயிரோடு இருக்கும் வரை நாங்கள் நால்வரும் ஒரே அறையில் ஒன்றாக இருக்க மாட்டோம்.

    உங்கள் நண்பர்களைப் புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்.” எனத் தெரிவித்துள்ளார். ரவி மோகனின் இப்பதிவு ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.