தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு என்ற சிலம்பரசனுக்கு தற்போது 42 வயதாகிறது. ஆனாலும் முரட்டு சிங்கிளாகவே வலம் வருகிறார். சிம்புவுக்கு பெண் பார்க்கும் படலமும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.
இதற்கிடையில் டி.வி. நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற டி.ராஜேந்தரிடம், சின்னத்திரை நடிகை சாந்தினி என்பவர், ‘நான் திருமணம் செய்தால் சிம்புவை தான் திருமணம் செய்வேன்’ என்று கூறினார். இதைக்கேட்டதும் டி.ராஜேந்தர் ‘எமோஷனல்’ ஆகிப்போனார்.
‘‘நானும் மனுஷன் தானேம்மா. எனக்கும் இதயம் இருக்கு. மனைவியை விரும்புவது மட்டுமல்ல, பிள்ளைகளை நேசிப்பதும் காதல் தான், பாசம் தான். உன் பேச்சு எனக்கு தப்பா தெரியல. ஆனாலும், அது என் மனச காயப்படுத்ததான் செய்யுது. என் பையனை உயிருக்கு உயிராக நேசிக்கக்கூடிய ஒரு பெண்ணை கடவுள் கொடுக்கணும். நான் என் மகனிடம் சென்று ‘நீ கல்யாணம் பண்ணிக்கிறியா…?’ என கேட்க மாட்டேன். நான் எதுவாக இருந்தாலும் இறைவனிடம் மட்டும் தான் கேட்பேன்.
நாங்கள் வற்புறுத்தினால் அவன் மறுக்கமாட்டான். ஆனாலும் நானோ, என் மனைவியோ என் மகனை வற்புறுத்த மாட்டோம்”, என கண்ணீர் மல்க டி.ராஜேந்தர் பேசினார்.