Friday, August 7, 2026
More

    Latest Posts

    ஜூலை 2, தாய்லாந்தில் வரலட்சுமி திருமணம்

    நடிகர் சரத்குமாரின் மூத்த மகளும், நடிகையுமான வரலட்சுமி, நிக்கோலய் சச்தேவ் என்பவரைக் காதலித்து வந்தார். இருவரது வீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

    கடந்த சில நாட்களாக வரலட்சுமி தனது குடும்பத்தாருடன் முதல்வர் முக ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பலருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்தார்.

    டில்லிக்கு பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்குச் சென்ற சரத்குமார், ராதிகா அங்கு அரசியல் பிரமுகர்களுக்கு திருமண அழைப்பிதழ் தந்தனர்.

    வரலட்சுமியின் திருமணம் எங்கு நடைபெறுகிறது, எப்போது நடைபெறுகிறது என்று தெரியாமல் இருந்தது. இப்போது அது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. ஜூலை 2ம் தேதி தாய்லாந்தில் திருமணம் நடைபெற உள்ளதாம். உறவினர்கள், நண்பர்களை தங்களது செலவில் தாய்லாந்து அழைத்துச் செல்கிறார்களாம் வரலட்சுமி குடும்பத்தினர்.

    சென்னையில் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளதாம். அதில் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துவார்கள் எனத் தெரிகிறது.

    Latest Posts

    Don't Miss

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.